செவ்வாய், 23 ஏப்ரல், 2019

உலக புத்தக தினம் - ஏப்ரல் 23





உலக புத்தக தினம் - ஏப்ரல் 23

மனிதன் உலக உணவு சங்கிலியின் முதல் நிலையில் (Apex Predator) இருப்பவன். அந்நிலையை நாம் வந்தடைய பல்லாயிரம் வருடங்கள் பிடித்தது. பல கோடி வருடங்கள் உலகில் வாழ்ந்து வரும் உயிரினங்களால் கூட எட்ட முடியாத நிலை. வித்தியாசம் ஒன்று தான் மனித மூளையின் ஆற்றல். அதையும் தாண்டி இன்னொரு விஷயமும் உண்டு மனிதனால் தன் அறிவை பகிரமுடிந்தது. ஆதி மனிதனின் சங்கேத சத்தங்கள் மொழியாக உருவாகி எளிதாக அறிவை பகிர கைகொடுத்து. குகை ஓவியங்களாக உருவாகிய அறிவு பகிர்வு, மொழியின் வழியாக தமிழர் கல்வெட்டுகளாக, சுமேரிய பலகைகளாக, எகிப்திய எழுத்துச்சுருள்களாக, சீன மட்டைகாகிதங்களாக ஒவ்வொரு இனமும் அதன் அறிவை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றியது. அதை ஒவ்வொரு தலைமுறையும் சற்று மெருகேற்றிக்கொண்டே சென்றது. இவற்றின் உச்சமாக வந்தது தான் புத்தகம். அது தகவல்களை தொகுத்து பகிர்ந்து கொள்ள வழிகோளியது. அச்சு இயந்திரம் வரும் முன் பைபிளை கையெழுத்து ப்ரதிகளாக உருவாக்கும் வேலையையே வாழ்க்கையாக கொண்ட பல ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களால் உருவானதே இன்றைய புத்தகத்தின் வடிவம்.
அச்சு இயந்திரம் வந்த பிறகு சாமானியரிடமும் புத்தகம் சாத்தியமானது. கடந்த 500-600 ஆண்டுகளில் புத்தகங்களில் ஏற்பட்ட அறிவு பகிர்தல்  ஏற்படுத்திய விழைவுகள் அசாத்தியமானது,  ரினைசன்ஸிலிருந்து, புரட்சிகளை, போர்கள், கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றங்கள், அறிவியல் அதிசயங்கள், மாற்று சிந்தனைகள் என்று கணக்கில் அடங்காது. அந்த புத்தக வாசிப்பின் நாளாக இன்று ஏப்ரல் 23 உலக புத்தக நாளாக 
கொண்டாடப்படுகிறது.


ஓரு புதினம் நம்மை தென்திசை மாதண்ட நாயகரின் தமிழர் படைகள் இலங்கையில் தொடுத்த தாக்குதல்களை காண இழுத்துச்செல்லும், வாட்டர்லூவில் நெப்போலியனின் முன் தாக்கும் குதிரை படையணிகளின் வலிமையை உணரச்செய்யும், ரஷ்ய்புரட்சியில் கோசாக்கு படைகளிடம் மக்கள் கொடுத்த பூக்களின் வாசத்தை நுகரச்செய்யும். 




மத்திய இந்தியாவின் தண்டகாரன்ய காடுகளில் நிலவும் வறுமையும், அதனால் எழுந்த கோவமும் அதன் பின்னால் வந்த நக்சல்பாரிகளின் பைகளில் அரசாங்கத்தின் வேலையை தாங்கள் எடுத்துக்கொண்டு மக்களுக்கு வினியோகிக்க எப்போதும் இருக்கும் மலேரியா நோய்த்தடுப்பு மாத்திரைகளை பார்த்ததும், யார் இவர்கள்? ஏன் இந்த தியாகம்? ஏன் அந்த கோவம்? என்று கேட்க தூண்டும். பெரும்பாலும் உப்பு சப்பற்ற வாழ்க்கை வாழும் சாமானிய மனிதனுக்கு இப்படி பல பரினாமங்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து
சிந்தனையை வளர்த்திட உதவும்.

இன்றைய புத்தகங்கள் வரட்டு தகவல்களை கூட சுவாரஸ்யமாக
தொகுத்து கொடுக்க கூடியவை. பூஜை புனஸ்காரங்கள் ஏன் தேவையில்லை, அவை மீமாசங்கள் என்பதிலிருந்து துவைதம்-அதுவைதம்
வேறுபாடுகளிலிருந்து, ஏன் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இன்றைய உலகின் முதல் உலக நாடுகளாக இருக்கிறது என்பது போன்ற விஷயங்கள் புரியாமல் இருக்கும் நம் பலருக்கும்  புரிந்து கொள்ள முயற்சி எடுத்தால் முதல் படியே புத்தக வாசிப்பு தான்.  பெரும் கனவுகள் புத்தகத்தின் வழியே தலைமுறை தலைமுறையாக அழிந்துவிடாமல் மனிதகுலத்தை முன்னகர்த்தி செல்கிறது. இப்படியான நாம் நம் பிள்ளைகளுக்கு புத்தக வாசிப்பின் ருசியை 
சொல்லிதர வேண்டாமா?

பிள்ளைகளுக்கு தகவல்களை சொல்லி தரும் புத்தகங்கள் மட்டுமே புத்தகங்கள் அல்ல, அவர்களின் கற்பனை திறனை உந்திதள்ளும், இன்னொரு உலகினை கற்பனையில் உருவாக்கி கொள்ள வாய்ப்பை தருவதில் புத்தகங்கள் தான்.

இன்று தான் கூகிள் (google)இருக்கிறதே என்ன வேண்டுமானாலும் தேடி கொள்ளலாமே என்று கேட்கும் முட்டாள்களுக்கு தெரியாது, வெறும் தகவல்கள் பயனற்றவை என்று, தகவல்களை உள்வாங்கி, அதன் ஊடாக கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றலே தனித்துவ சிந்தனை என்பது. ஒரு புத்தகம் அதற்கான வெளியை தருகிறது. அதனால் தான் ஒருவன் பல நூல்களை கற்று அறிஞனாகிறான், பல Documentary பார்த்து, பல websiteகள் தேடி அறிஞனான் என்று கேள்விபட்டிருக்கிறோமா?

இப்படியான புத்தக வாசிப்பை நம் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ஆர்வத்தினை
ஏற்படுத்த முடியும். ஒரு வயதிற்கு முன்னரே இதை செய்யலாம், செய்ய வேண்டும்.

குழந்தைகள்  முதல் சில வருடங்கள் கைகளால் எல்லாவற்றையும் தொட்டு உணர
முயற்சிப்பார்கள், அப்போது கெட்டியான அட்டை கண்கவர் வண்ணபுத்தகங்கள் அவர்களின்
ஆசையை தூண்டும், புத்தகத்தை தொட்டு ரசிக்கும் குழந்தை, பின் அதன் நிறத்தினால் ஈர்க்கப்படும், அதை போன்ற புத்தகங்களை குழந்தைகள் தூங்க வைக்க கதையாக படித்து காண்பிக்க ஆரம்பிப்பதே முதல் படி, நாம் நினைப்பதை விட சிறு குழந்தைகள் அவ்வாறான கதைகளில் கற்பனையை இயல்பாக அடைவார்கள். அதுவும் புத்தகங்களை பார்த்து  நாம் படித்து கதை சொல்லும் போது மெல்ல மெல்ல புத்தகங்களோடு இயல்பான பரிச்சயம் ஏற்படும். அதுவே அவர்களை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்.

ABCD, 123, Rhymes மட்டுமே குழந்தைகள் புத்தகமல்ல, கதைகள், புதிர்கள், விளையாட்டு புத்தகங்கள் யாவும் குழந்தைகளின் புத்தகமே. நாம் குழந்தைகளை புத்தகத்தினை சுவாசிக்க கற்று கொடுத்தால் போதும் அவர்களின் வாழ்க்கை வளமானதாக ஆவது உறுதியாகிவிடும்.


சொல்லுதல்யார்க்கும்எளியஅரியவாம்
சொல்லியவண்ணம்செயல்.

புத்தக வாசிப்பும் அப்படியே, நம் குழந்தைகளை சிறந்த புத்தக வாசிப்பாளராக உருவாக்க நாம் முதலில் புத்தக வாசிப்பின் ருசியை உணர்ந்திருக்க வேண்டும். மானிடகுலத்தின் ஆசகாய சாகசங்கள் எல்லாம் அறிவை பகிர்ந்ததின் மூலம் உருவாகியவையே. நாமும் நம் பங்கிற்கு புத்தக வாசிப்பின் வழியாக சிந்தனையை விரிவுபடுத்தி அறிவை செம்மையாக்கி மானுடத்தின் அடுத்த கட்ட நகர்வில் பங்கெடுப்போம்.




இனிய உலக புத்தக நாள் வாழ்த்துக்கள் - 2019
Happy World Book Day - 2019





செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

Next Year In Jerusalem- For Adi

Operation Jayasurya. Sinhala army was on winning streak, Elephant pass had fallen, Jaffna peninsula came under control of Sinhalese Army were the news headlines of those crucial days of war in the Winter of 1995. I was a school freshman back then, was staying at Periyappa’s place since Amma and Appa had to travel for their graduate studies university exams. I read the headlines and left for school in the morning. When I come back in the evening, I can see the newspaper neatly folded and kept on Phone desk, it’s a sign that Periyappa had finished reading the Newspaper. Periyappa had his mark of doing even small and unimportant things neatly. Even the clothes he worn on a day is neatly folded and hanged on the cloth hanging line to be taken up for washing later.

I would be devouring the news of the war first thing when I come back from school.
Periyappa was a strong supporter of LTTE’s struggle for the freedom of Tamil Eelam. He can talk in detail about the Eelam Tamil People’s freedom struggle. Those were the days when the tigers were on the losing front. But Periyappa never had any difference of opinion regarding the capability of the Tigers. On one such evening, a Tamil Scholar from a near by village, who had great reputation for Periyappa’s Love for Tamil Language and People came to meet him. He was really sad, he said to Periyappa, things over there (Tamil Eelam) are really bad, we need to do something from here. But the government is totally against that. Periyappa said, don’t worry, our guys(Tigers) will give them
Back. And the conversation went on discussing about earlier wars and political mistakes of the Tigers. I was a silent observer of this conversation and many such conversations. 

As Periyappa had said, within 2 years, the Tigers strike back with Operation Oyatha Azhaigal(unceasing waves) and captured back every inch of Tamil Land. Elephant Pass Military camp surrendered with 40,000 Sinhalese soldiers as POWs who were later released by the tigers as a sign of good faith with the government during the talks.

I grew my love for Tamil Nationalism from such few things that I heard from Periyappa and from the books he encouraged me to read to understand more about Tamil, its people and its history. From that inspiration I read widely about the Tamil Eelam’s fight for Nationhood, which gave me the whole picture. Infact, Periyappa won’t show or express much. We have to grab the information from his talks and read further on our own, to get a full picture of anything. Sometimes, Extreme Tamil Nationalists used to visit Periyappa who will give their articles to him so he can read and give suggestions. I quietly stole them after I confirm Periyappa had read it. That’s how I grew my passion for Tamil Nationalism.

Periyappa’s thought process was inspired by the Leftist-Dravidian Revolutionary thoughts that was sweeping the World and Tamil Nadu during his Undergraduate days in the 1950-60s. He supported the Tamil Nationalistic ideologies propagated by DMK inadvertently supported the then Dravidian Revolutionary leaders like Karunanidhi, who wrote and spoke vehemently about the warrior nature of Tamils and the glory of Sangam Tamils Warrior clans of Kallars and Maravars. 1960s saw the rise of DMK and Karunanidhi became the Chief Minister of Tamil Nadu. Periyappa did support Karunanidhi when he was a CM during 2006-2011 term.

But May 18, 2009 changed everything. I got a call from my cousin Dinesh, he and Periyappa were watching the pictures of Prabhakaran (Tiger Supremo) dead. And the decimation of Tigers. Nearly 40,000 people were killed in last two days, innocent Tamil people were lured to no fire zone a 1KMX1KM square and Sinhalese army, navy and air force fired on the no fire zone and killed everyone. Then Chief Minister Karunanidhi for all his rhetoric in the 1960s could have stopped the massacre. He instead silenced all the protests in Tamil Nadu. Tamils despised him for this mistake for which his political party is still paying dearly by not getting elected to power after 2011.

Don’t know what went in Periyappa’s mind on seeing the horrible pictures of war crimes on TV. But from then on whenever I spoke to Periyappa about politics he despised Karunanidhi and told that he caused the end of Tamil Eelam’s struggle for independence.


Periyappa died last year, today May 18th how much ever I remember Tamil Eelam People’s struggle for independence on par with that I get reminded of Periyappa. There so many good people like my Periyappa who saw the rise of Eelam struggle and gained the confidence that there is going to be an independent Tamil Eelam soon.  That too, Eelam is not even our place, but as Periyappa used to say, it’s the country of our people, the Tamils. I can’t imagine how he would have felt when that dream was shattered when he saw those pictures on TV.

Periyappa used to say about the Jews, Theodore Hershel, Zionist Movement, the two thousand year dream. Every year during Yomkippur the Jews sing “ Next Year in Jerusalem” which kept the dream alive over generations. Then in 1948, they became a nation. 

There are so many things that Periyappa have spoke like this which were sprinkled across in his conversations about Tamil Eelam. What Periyappa had actually done is, he told about the fall and rise of another race as a lesson for us. We are telling to our kids about the greatness of Tamils, their history and about the struggle for Tamil Eelam in casual talks like how Periyappa used to talk to us. So our generations won’t forget even if it had to be 1000 years. In some way, Periyappa’s thought kindled descendants would play atleast a very minuscule role in getting justice for the massacres of Tamils and the independence of Tamil Eelam.
 Every year Remembrance of May 18 will bring the vivid memories of the great man, My Periyappa.

“Next year in Jerusalem...
 Next year in Jerusalem....”









வெள்ளி, 30 நவம்பர், 2018

நாம் ஏன் ஆழமான விவாதங்களை விரும்புவதில்லை?

சில வருடங்களுக்கு முன்பு நான் வேலை பார்த்த நிறுவனத்தில் பணிபுரிந்த திருநெல்வேலியை சேர்ந்த சக ஊழியர் ஒருவர் கிண்டலாக சொல்வார் எதற்கெடுத்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் சமூக பார்வை, வரலாற்று பார்வை, பொருளாதார பார்வை, ஆன்மீக பார்வை என்று நீட்டி முழக்கி அயற்ச்சி அடைய வைக்கிறீர்களே, உங்களுக்கு இதெல்லாம் எதற்கு? சிலருக்கு புரியாது, சிலருக்கு பிடிக்காது, இந்தியர்கள், அதுவும் தமிழர்களுக்கு சினிமாவை தவிர வேறு எதையும் விவாதிக்கவே பிடிக்காதே, உங்கள் விளக்கமெல்லாம் வீண் தானே என்பார்

நான் அப்போதெல்லாம் யோசித்து பார்ப்பதுண்டு, ஏன் தமிழர்கள் ஆழமான சிந்தனைகளிலோ, விவதங்களிலோ ஆர்வமற்ற சமூகமாக இருக்கிறோமென்று. இது தமிழர்களிடம் ஒரு  சமூக நோய் போலவே பீடித்திருக்கிறது. எங்கும் எதிலும் ஆழமான, சமநிலையான புரிதல்களே பெரும்பாலும் இல்லை. மேம்போக்கான புரிதல்கள், பேச்சுகள், அவதூறான பேச்சுகளை நகைச்சுவை என்று நினைத்துக்கொள்வது, இவையே தமிழர்களின் பெரும்பாலான கருத்து பரிமாற்றங்கள் நிகழும் களங்கள். இதை மீறி பேசினால் ஆன்மீகம் அதுவும் எந்த நீண்ட வாசிப்பும் அற்ற தப்பும் தவறுமான புரிதல்கள் அதையே ஆன்மீகம் என்று நினைக்கும் போக்கு இவையே தமிழர்களின் விவாத வட்டம். இப்படியான ஒரு சமுதாயம் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான சிந்தனையின் பங்களிப்பாக என்ன கொடுக்கபோகிறது என்பது வெட்கி தலைகுனிய வைக்கிறது.

ஒரு முறை தமிழகத்தின் மிக பெரிய பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பேராசிரியரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பெரும் ஆர்வத்தோடு அவருடன் பேச ஆரம்பித்தேன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சான் பால் சார்ட்ரே, அயன்ராண்ட் பற்றியெல்லாம் பேசுவார் என்று நினைத்தேன், ஆனால், பெரிய ஏமாற்றம். அவருக்கு பாடத்திட்டத்தினை தாண்டி எதுவுமே தெரியவில்லை. பேச்சு வரலாறு பக்கம் திரும்பியது, அவர் ஒரு முறை கம்போடியா சென்றாராம், அப்போது அங்கே ஆங்கோர்வாட் கேயிலை கண்டாராம், அது சூர்யவர்மன் எனும் சோழ மண்ணன் கட்டியதாம். (அவன் ஓர் கைமர் இன மண்ணன்) தலையில் அடித்து கொள்ளலாம் போலிருந்தது, பேஸ்புக், வாட்ஸ்ஆப் சரித்திரவியலாளர்கள் அடித்து விடும்தமிழன்டாரக சரித்திர புரிதல். தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள் சிந்தனையை மழுங்க செய்யும் சிறந்த சேவையை செய்கின்றன. இவற்றிலிருந்து வரும் மாணவர்கள் அச்சடித்த சோற்று பிண்டங்கள் போல், அந்த வடிவத்திலிருந்து விடுபடாமல் வளர்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு நுட்பமான, ஆழமான சிந்தனைகள் எல்லாம் பல காத தூரம்.

குழந்தை பருவத்திலிருந்து, நல் எண்ணங்களை விதைப்பதை விட, படித்தால், நிறைய சம்பாதிக்கலாம், சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம் என்ற ஒற்றை பிம்ப எண்ணத்தை ஆழமாக விதைத்துவிடுகின்றனர். இது குழந்தைகளை ஒரு வகையான சுயநல சிந்தனைகளுடன் வளர வழிவகுக்கிறது. சமூக அக்கறை, மனிதர்கள் மீதான அன்பு, இயற்கையின் பேரன்பு எதுவுமே முக்கியமல்ல என வளர்ந்து வரும் இத்தகைய குழந்தைகள்  பின்னாளில் எந்த ஒரு சமூக கொடுமைகளை பற்றி விவாதித்தாலும் கூட சலிப்பு கொள்கின்றனர். இன்னும் சிலர், ஏதோ நாமும் இருக்கிறோம் என்பதற்காக எதாவது உளறிவிட்டு பின் அதை ஒரு முட்டாள் விவாதமாக கருதுகின்றனர்

இந்திய-தமிழக கல்வி முறைகள் ஆழமான சிந்தனைகளுக்கு தேவையான தொடர் வாசிப்பு, நீள் வாசிப்பு ஆகியவற்றை முதன்மைபடுத்துவதில்லை. பெரும் வாசிப்புக்கென்று ஒரு பொறுமை வேண்டும், அவற்றுக்காக பயிற்றுவிக்க வேண்டும், அது மிக பெரிய உழைப்பை கோருவது. அதே போல் விவாதங்களுக்கும் என்று ஒரு முறைமை, பயிற்சி அவசியம், நம் கல்வி முறை அவற்றை அளிப்பதில்லை. பெரும்பாலான தமிழர்களால், குறிப்பாக சோற்றுக்கு அலைய அவசியமில்லாத பெரிய பட்டங்கள் வாங்கி அவற்றின் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவான சம்பளம்  கிடைக்கும் வேலைகளில் உள்ள மக்கள் அனேகமாக எவருக்குமே வாசிப்பு என்பதே கிடையாது, அவர்களுக்கு சம்பாதிப்பது மட்டுமே கடமை என்று பயிற்றுவிக்கபட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்வதில்லை, இயற்கையை ரசிக்க அவர்களுக்கு தெரியாது, இயற்கையின் பேர் உருவத்தை பேரன்பை புரிந்து கொள்ள இயலாதவர்கள். பலருக்கும் பொழுதுபோக்கு என்பதே சினிமா-டிவி தான்.அவ்வளவு ஏன் பெரும்பாலான தமிழர்களுக்கு சினிமா இசையை தாண்டி நல்ல இசையை ரசிக்க கூட பயிற்சி கிடையாது. நல்ல இசை உருவாக்கும் மனநிலை ஓர் அரூபமான உன்னத நிலையை தரும், அத்தகைய அனுபவங்களை உணர தெரியாதவர்கள். ஒரு ஊரை சுற்றிபார்த்தார்கள் என்றால் கூட, அந்த ஊரோ, அங்கு நிலவும் சூழ்நிலையோ அவர்களுக்கு எவ்வாறான மனநிலையை அளிக்கிறது என்று கோர்வையாக கூட சொல்ல தெரியாது. இவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். நம் கல்வி முறை, சமூக அமைப்பு அடிச்சான காப்பிகளை உருவாக்குகிறது. ஒரு வேலை, இப்படி உப்புசப்பில்லாத இவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் அதிர்ச்சிக்கு ஆட்பட்டாலோ, வெறுமை உணர்ந்து வாழ்கை என்பது என்ன எனும் கேள்வி வாழ்கையின் நடுத்தர வயதில் வந்தாலோ பதில் தெரியாமல் இவர்களில் சிலர் சென்று சேரும் இடம் ஆன்மீகம், முன்னாட்களில் கோயில் குளம் ஜோசியம் என்று அழைந்திருப்பார்கள், இப்போது அந்த இடத்தை கார்ப்பரேட் சாமியார் மடங்கள் பிடித்துக்கொண்டன.

கார்ப்பரேட் சாமியார் மடங்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒரு புத்தகமே போடலாம். இந்தியாவில் தாராளமயமாக்களுக்கு பின் வளர்ந்த இவ்வாறான மேல் மத்தியதர வகுப்பு மக்களே கார்ப்பரேட் சாமியார்களின் மூலதனம். இவர்களின் இளமை காலம் முதல் இவர்களுக்கு சொல்லப்பட்டது ஒன்றே எப்போதும் முன்னேறி கொண்டே இரு, அது மட்டுமே போதும். தாராளமயமாக்களுக்கு பிறகு வந்த பொருளாதார ஏற்ற நிலை இவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்தியது. முன்னால் தலைமுறைகள் நினைத்து பார்க்க முடியாத பொருளாதார நிலையில் முன்னேறியதே வாழ்க்கையின் வெற்றியாக கருதப்பட்டது. ஆனால், வாழ்க்கையின் வெறுமை முகத்தில் அறையும் போது எழும் வினாக்களுக்கு பதில் கிடைக்காமல் திணறும் போது இவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கும் பாதையே கார்ப்பரேட் ஆன்மீகம், இவர்களுக்கு பெரும்பாலும் இனிமையான மேல்தட்டு ஆங்கிலத்தில் ஆங்காங்கே இந்து மத தத்துவங்கள், புரிதல் இல்லாத வரலாற்று விளக்கங்கள், அறிவியல் அற்ற அறிவியல் போன்ற தகவல்கள் என்று  தூவி, இரண்டு சொட்டு சமஸ்கிருத வார்த்தை ஜால நெய் விட்டு கொடுக்கப்படும் ஆன்மீக ஊத்தப்பம் வாழ்க்கையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டதாக ஒரு மமதையை கொடுத்துவிடுகிறது. இவர்களுக்கும் எந்த சமூக, வரலாற்று, பொருளாதார நோக்குகளில்  ஏன் உண்மையான ஆன்மீக நோக்கில் கூட ஒரு விஷயத்தை அணுக தெரியாது. ஆகையால் இவர்களுக்கு எந்த பொது விவாதமும் இவர்களின் கார்ப்பரேட் சாமியார் சுட்டு தரும் தோசையில் மட்டுமே விளங்கும், அதுவும் சாமியார் என்ன சார்பு நிலை எடுக்கிறாரோ அதை பொருத்து

இப்படியாக வளர்ந்து வந்த நம்
தலைமுறைக்கு தர்க்கம் என்பதன் அர்த்தம் கூட தெரியாது. நம்மில் பலருக்கு பெரும்போக்கான சிந்தனையே வாய்ப்பதில்லை, வாய்த்தாலும் சிந்தனை ஓட்டங்களுக்கு எரிபொருள் கிடைப்பதில்லை காரணம் வாசிப்பு பயிற்சி கிடையாது, வாழ்க்கையை வெளியிலிருந்து அனுமானிக்கும் நோக்கும் கிடையாது, இவர்களில் சிலருக்கு வெற்று கேளிக்கை களியாட்டங்கள் மட்டுமே உவகையை அளிக்க கூடியவை, இதனாலேயே எந்த ஆழமான, பரந்துப்பட்ட விவாதங்களையும், சிந்தனைகளையும் புரிந்து கொள்ள கூடிய முடியாது. இருந்தாலும், இவர்களில் சிலரேனும் ஏதேனும் வாசிப்புகளின் வழியோ, வாழ்க்கை அனுபவங்களின் வழியோ ஆழமான, நுட்பமான சிந்தனையோட்டங்களின் தாக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்ற பேர் ஆவலோடு தான் அதிகமான விளக்கங்களை கொடுத்து இத்தகைய விவாதங்களை என்னை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் தொடர்ந்து ஆரம்பிக்கின்றேன். கோவணம் மட்டுமே கட்டும் ஊரில் வேட்டி கட்டிய கிறுக்கனாக!